சுங்கை பூலோ:
வடகிழக்குப் பருவமழையால் மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் கிளந்தான், திரெங்கானு, கெடா, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், பேராக், மலாக்கா மற்றும் பெர்லிஸ் ஆகிய 9 மாநிலங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த மழையினால் வீடுகள், உள்கட்டமைப்புகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் கணிசமான சேதம் ஏற்பட்டது, ஆயிரக்கணக்கான குடும்பங்கள், குறிப்பாக கிழக்கு கடற்கரைப் பகுதிகள் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் வகையில், Daikin Malaysia Sdn Bhd, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மலேசிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு RM150,000 நன்கொடை அளித்து உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இந்த நன்கொடையானது, Daikin Malaysiaவின் தற்போதைய சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளின் ஒரு பகுதி என்றும், இது பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதில் அந்த நிறுவனம் கொண்டுள்ள ஆழ்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இதற்கான காசோலை வழங்கும் விழா சுங்கை பூலோவில் உள்ள Daikin Malaysia Sdn Bhd தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் Daikin Malaysia துணைத் தலைவர் (தயாரிப்பு) Tan Yong Cheem, மலேசிய செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஹக்கிம் ஹம்சாவிடம் குறியீட்டு காசோலையை வழங்கினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மலேசிய செஞ்சிலுவைச் சங்கத்துடன் ஒத்துழைக்கும் இந்த வாய்ப்பிற்காக Daikin நன்றி தெரிவிப்பதாக Tan Yong Cheem கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.