ஈப்போ:
கோல கங்சார் அருகே உள்ள சுங்கை கம்போங் பூண்டி, பாடாங் அம்பாங்கில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் பொதுமக்களால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்தைப் பரிசோதித்ததில் குற்றவியல் தொடர்பான எந்தக் கூறுகளும் கிடைக்கவில்லை என்று கோல கங்சார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹெய்ஷாம் ஹருன் கூறினார்.
காலை 11 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது என்றும், பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோல கங்சார் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 013-3669469 அல்லது 05-7762222 என்ற எண்ணில் கோல கங்சார் காவல் நிலையத் தலைவர் இன்ஸ்பெக்டர் வான் முகமட் ஜாகிருதின் அரிஃபினைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.



















