IJN இல் இலவச சிகிச்சை நிறுத்தப்படுகிறதா?

IJN இல் இலவச சிகிச்சை நிறுத்தப்படுகிறது? இலவச சிகிச்சைக்கு மற்ற மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் மாற்றப்படுகின்றனரா?

இதில் உண்மை எதுவும் இல்லை என்று IJN அதன் ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்தது.

IJN தொடர்ந்து மலேசிய சுகாதார அமைச்சின் முழு நிர்வாகத்தில் அரசாங்கத்தின் உடமையாக இருக்கும் என்று அது மேலும் தெரிவித்தது.

IJN தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இங்கு இனிமேல் இலவச சிகிச்சை இல்லை என்பது அடிப்படையற்றது. வாட்ஸ்ஆப்பில் பரவி வரும் இச்செய்தியில் உண்மை இல்லை என்று அது மேலும் கூறியது.

மேலதிக தகவல்களூக்கு 03 2617 8200 என்ற தொலை பேசி எண்ணில் அழைத்து தெளிவுப்பெறலாம். அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here