கோலாலம்பூர்:
நீண்ட தூர பயணங்களுக்கு இரண்டாவது ஓட்டுநர் அமர்த்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், பேருந்து ஓட்டுநர் பற்றாக் குறை மிக மோசமான நிலையை எட்டி இருக்கின்ற நிலையில் இரண்டாவது ஓட்டுநரை பணியில் அமர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பான் மலேசியா பஸ் நடத்துனர் சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ முஹம்மட் அஷ்ஃபார் அலி கூறினார்.
பேருந்து ஓட்டுநர் பற்றாக்குறை மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது என்று அவர் எச்சரித்தார்.
பேருந்து போக்குவரத்து துறை தற்போது கிட்டத்தட்ட 5,000 ஓட்டுனர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது.
Class E லைசென்ஸ், PSV, GDL லைசென்ஸ்கள் பெறுவதற்கு சொந்தப் பணத்தை செலவு செய்வது ஓட்டுநர் பற்றாக்குறைக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.
இந்த லைசென்ஸ்களைப் பெறுவதற்கு 4,000 முதல் 5,000 ரிங்கிட் வரை ஒருவர் செலவிட வேண்டி இருக்கிறது. பி40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இது மிகப்பெரிய பணச் சுமையை தரவல்லது ஆகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.