20 மாத தவணை நிலுவை; விரக்தியால் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மாது

ஈப்போ: 20 மாத தவணை நிலுவையில் இருந்த தனது மோட்டார் சைக்கிள் இழுத்து செல்லப்படவிருந்ததால் விரக்தியடைந்த பெண் ஒருவர், தைப்பிங் அருகே உள்ள போகோக் அஸ்ஸாமில் நடந்த சம்பவத்தில் வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தைப்பிங் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் நசீர் இஸ்மாயில், 40 வயதுடைய பெண் நேற்று கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

டிசம்பர் 26 அன்று, மாலை 4.27 மணியளவில், தைப்பிங்கின் ஜாலான் மஸ்ஜித் போகோக் மீது ஒரு பெண் கருப்பு ஹோண்டா ஆர்எஸ்எக்ஸ் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் குறித்து ஒரு நபரிடம் இருந்து காவல்துறைக்கு புகார் வந்தது. குற்றவியல் சட்டத்தின் பிரிவு 435 இன் கீழ் மேலும் விசாரணைக்காக அந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

20 மாத தவணை செலுத்தாமல் இருந்ததற்காக பெண்  அதிருப்தி அடைந்ததால் இந்த சம்பவம் நடந்ததாக முகமட் நசீர் விளக்கினார். குற்றவியல் சட்டத்தின் 435 ஆவது பிரிவின் கீழ், தீயில் குறும்பு செய்ததற்காக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும், இந்த விவகாரம் குறித்து விசாரணை ஆவணம் திறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here