2024 டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு வரையிலான ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ரெப்பிட் கேஎல் அதன் ரயில் சேவையை பின்னிரவு 3 மணி வரையிலும் பஸ் சேவையை பின்னிரவு 3.30 மணி வரையிலும் நீட்டித்துள்ளது.
2025 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு பஸ் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரசாரானா மலேசியா பெர்ஹாட் இன்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7.30 மணி தொடங்கி அனைத்து ரயில் தடங்களும் அதிகரிக்கப்பட்ட ரயில் பயணச் சேவைகளுடன் செயல்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
சுமுகமான, விரைவான பஸ், ரயில் சேவைகளுக்கு Touch “n Go கார்டுகளை பயன்படுத்துமாறு பிராசாரானா நிறுவனம் பொது மக்களை கேட்டுக்கொண்டது.





















