லாபுவான்: இருதய நோய் மலேசியர்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல்!

கோலாலம்பூர்:

இருதய நோய் மலேசியர்கள் இடையே ஒரு தீவிரமான, அச்சுறுத்தலாகவும், தடுக்கக்கூடிய, மரணங்களில், ஒரு முக்கியக் காரணமாகவும், உள்ளது என்று
சுகாதாரத் துணை இயக்குநர், டாக்டர் இஸ்முனி போஹரி தெரிவித்தார்.

நேற்று உலக இருதய தின நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறுகையில் `இஸ்கிமிக்’ (ischemic) இருதய நோய் 2024-இல், மருத்துவ ரீதியாக, உறுதிப்படுத்தப்பட்ட, மரணத்திற்கான இரண்டாவது முக்கியக் காரணமாக இருந்துள்ளது என கூறினார் . இது பதிவு செய்யப்பட்ட மொத்த இறப்புகளில், 15.1% ஆகும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த நோய், 41 முதல் 59 வயதுக்குட்பட்ட நபர்களை முதன்மையாக, பாதிக்கும் அதே வேளையில், பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது.

அது மட்டும் இன்றி, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் பருமன் போன்ற, முக்கிய, ஆபத்துக் காரணிகளையும் டாக்டர் இஸ்முனி, மேற்கோள் காட்டினார்.

2023, தேசிய, சுகாதாரம், நோய்த்தடுப்பு, கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் பெரியவர்களிடையே, இந்த நோய்கள், அதிகளவில் இருப்பதாக, கண்டறியப்பட்டுள்ளது.

எனவேதான், ஆரோக்கியமான, வாழ்க்கை முறையைப், பின்பற்றுமாறும், வழக்கமான, சுகாதாரப் பரிசோதனைகளை, மேற்கொள்ளுமாறும், அவர், பொதுமக்களை, வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here