ராமதாஸ் -அன்புமணி இடையே கடும் மோதல்; தொண்டர்கள் அதிர்ச்சி

புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசுக்கும் பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ராமதாஸ் தனது மகள் வழிப் பேரனான முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார்.

இதனை ஏற்க மறுத்துவிட்ட ராமதாசின் மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி, “கட்சியில் சேர்ந்த நான்கு மாதங்களுக்குள் இளைஞரணி தலைவர் பொறுப்பைக் கொடுக்காதீர்கள். அவருக்கு என்ன அனுபவம் உள்ளது களத்தில் இருந்து வேலை செய்வதற்கு?” எனக் கேட்டார்.

இதைக்கேட்டு கோபமடைந்த ராமதாஸ், ‘நான் சொல்வதைத் தான் யாராக இருந்தாலும் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. புரிகிறதா? கட்சியில் இருக்க விருப்பமிருந்தால் இருக்கலாம், இல்லாவிட்டால் போகலாம்,’’ எனக் கூறினார்.

தந்தையின் பேச்சால் அதிருப்தி அடைந்த அன்புமணி, “பனையூரில் தனியாக அலுவலகம் திறந்து இருக்கிறேன். என்னை வந்து சந்திப்பதாக இருந்தால் அங்கு வரலாம்,” என்று அறிவித்துள்ளார்.

இதனால் தொண்டர்கள் செய்வதறியாது தடுமாறி நிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here