கோலாலம்பூர்:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர் டாக்டர் முகமட் யூஸ்ரி பாகிருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற BN டாக்டர் முகமட் யூஸ்ரி பக்கீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்ஸ்யா-அல்லா, மக்களின் குரல் கருணை மற்றும் திறமையுடன் ரசெயற்படுத்தப்படும்” என்று அன்வார் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில், மும்முனை போட்டி நிலவியது. இதில் 11,065 வாக்குகளைப் பெற்ற முகமட் யுஸ்ரி 5,006 வாக்குகள் பெரும்பான்மையைப் பெற்றார். அவரது நெருங்கிய போட்டியாளரான பெரிகாத்தான் நேசனலின் அப்துல் முஹைமின் மாலேக் 6,059 வாக்குகளையும், பார்ட்டி சோசியாலிஸ் மலேசியாவின் பவானி கேஎஸ் 1,106 வாக்குகளையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
























