வாத்துக்கறி, மது குடித்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் மடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

தமிழ் நாடு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் வயது24. இவர் நேற்று இரவு  நபர்களுடன் கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பயன்பாட்டில் இல்லாத புதியதாக கட்டி பாதி நிலையில் உள்ள 2 அடுக்கு மாடி கட்டிடத்தில் நேற்று முன் தினம் இரவு புத்தாண்டு கொண்டாடினர்.

வாத்து கறி சமைத்து அதை எடுத்துக் கொண்டு 2ஆது மாடிக்கு ஏறி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.அப்போது அனைவரும் போதையில் நடனமாடினர். பிறகு கீழ இறங்கி வரும் போது, விக்னேஷ் தவறி, கீழே விழுந்துள்ளார். அப்போது விக்னேஷுக்கு, தலை, மற்றும் கால் ஆகிய இடங்களில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு, துடித்துள்ளார்.

இதையடுத்து, விக்னேஷ் உடன் மது அருந்திய நண்பர்கள் பயந்து விக்னேசை சம்பவ இடத்திலேயே அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். சம்பவம் நடந்து நீண்ட நேரம் ஆன நிலையில் உடன் வந்த நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடதில் ரத்தவெள்ளத்தில் இருந்த விக்னேசை பரிசோதனை செய்த போது இறந்த நிலையில் இருந்து உள்ளார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆந்தந் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் விசாரணையில் விக்னேஷ் தனது நண்பர்கள் நானேஷ், ஆகாஷ், கணேஷ் ஆகியோர் உடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்தி இருந்தபோது தவறி விக்னேஷ் கீழே விழுந்து இறந்து விட்டதாகவும், பயந்து அங்கிருந்து தப்பி சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.  பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு கொலையை? தவறி விழுந்து இறந்தாரா? என தெரிய வரும். தொடரந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here