மலாயா பல்கலைக்கழகத்தில் பூனைகள் கொலை; காரணமானவர்களை அடையாளம் காட்டினால் RM10,000 சன்மானம்- SPCA

கோலாலம்பூர்:

மீபகாலமாக மலாயா பல்கலைக்கழகத்தில் பூனை மற்றும் நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதற்கு காரணமானவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு RM10,000 சன்மானம் வழங்கப்படும் என்று சிலாங்கூர் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் (SPCA) அறிவித்துள்ளது.

இவ்வாறு கொடூரமான, காருணியமற்ற இதயத்தை உடைய வைக்கும் செயல்கள் விலங்குகள் நலச் சட்டம் 2015 இன் கீழ் ஒரு குற்றமாகும் என்று SPCA தலைவர் கிறிஸ்டின் சின் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் உண்மையான தகவல் தெரிந்தவர்கள் 011-51189716 என்ற எண்ணுக்கோஅல்லது [email protected]. என்ற அகப்பக்கத்திற்கோ சென்று புகார் தகவல் தருமாறு அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here