கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அடுத்த சனிக்கிழமை (அக்டோபர் 18) இங்குள்ள லாட் எஃப், கேஎல் சென்ட்ரலில் நடைபெறும் தேசிய அளவிலான தீபாவளி மடானி திறப்பு இல்ல உபசரிப்பு 2025 இல் கலந்து கொள்ள உள்ளார்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில், ஒற்றுமை, நல்லிணக்க உணர்வில் தீபாவளியைக் கொண்டாட அனைவரும் பங்கேற்குமாறு என்று இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
இந்த கொண்டாட்டம் நாம் அனைவரும் ஒரு பெரிய மலேசிய மடானி குடும்பமாக ஒன்று சேர ஒரு வாய்ப்பாகும். இந்த ஆண்டு தீபாவளி மடானி கொண்டாட்டத்தை மகிழ்ச்சியான நிகழ்வாக மாற்ற அனைவரும் எங்களுடன் இணையுமாறு நான் அழைக்கிறேன் என்று அவர் கூறினார்.
அனைத்துலக இளம் எதிர்காலத் தலைவர்கள் உச்சி மாநாடு (iFuture) 2025 உடன் இணைந்து நடைபெற்ற ‘அமைச்சர்கள் மன்றம்: எதிர்காலப் பணியாளர்களில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் பெர்னாமாவிடம் இவ்வாறு கூறினார். இதில் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் பங்கேற்றார்.
பிரதமரின் வருகை கொண்டாட்டத்தை மேலும் உற்சாகப்படுத்தும் என்றும், இது நாட்டின் ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையைக் குறிக்கிறது என்றும் கோபிந்த் கூறினார்.தீபாவளி அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படவிருக்கிறது. சென்ற ஆண்டு நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பிலும் பிரதமர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.










