சுக்கிர சதுர்த்தி வழிபாடு

விநாயகப் பெருமானுக்கு உரிய திதியாக சதுர்த்தி திதி திகழ்கிறது. வளர்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் தேய்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் அந்த சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பல நன்மைகள் நடைபெறும்.
2025 ஆம் ஆண்டு வரக்கூடிய முதல் வழிப்பாடாக இந்த சதுர்த்தி வழிபாடு திகழ்கிறது. இது மார்கழி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி என்பதால் நாம் எந்த வேண்டுதலை அது விரைவிலேயே நடைபெறும் என்று கூறப்படுகிறது. பொதுவாக வளர்பிறை சதுர்த்தி சமயத்தில் விநாயகப் பெருமானிடம் நமக்கு அதிக அளவில் எது சேர வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை கேட்க வேண்டும் என்றும் தேய்பிறை சதுர்த்தியில் தான் நம்முடைய கஷ்டங்களை கூற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
அப்படி செய்தால் தான் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்றும் கூறலாம். இந்த வருடத்தின் முதல் சதுர்த்தி என்பது வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக்கிழமை அன்று சதுர்த்தி திதி வருவது என்பது கூடுதல் பலனை தரும்.
பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கமும் வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ ஆலயத்திற்கு மட்டும் சென்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்து விட்டு வந்துவிடுவார்கள். எப்படி இருந்தாலும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி அன்று வீட்டில் இந்த முறையில் வழிபாடு செய்தோம் என்றால் செல்வ செழிப்புடன் நம்மால் வாழ முடியும்.
இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6 மணியிலிருந்து 7:30 வரை, 9:30லிருந்து 10:30 வரை, 12:30 லிருந்து 1:30 வரை, மாலை 6:30 லிருந்து 9:30க்குள் செய்யலாம். விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு விரதத்தை ஆரம்பித்து மாலை நேரத்தில் இந்த வழிபாட்டை செய்து விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். விரதம் இருக்க இயலாதவர்கள் மேற்ச்சொன்ன நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்தால் அந்த நேரத்தில் வீட்டில் இந்த முறையில் வழிபாடு செய்து கொள்ளலாம்.
வீட்டில் கண்டிப்பாக  விநாயகரின் படமோ, சிலையோ இருக்கும். அதை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அருகம்புல் மாலையை வாங்கி சாற்றுங்கள். வெள்ளெருக்கு விநாயகர் இருக்கும் பட்சத்தில் அந்த வெள்ளருக்கு விநாயகருக்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்தோம் என்றால் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது விநாயகர் பெருமானுக்கு முன்பாக ஐந்து அகல்விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை விநாயகப் பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். எதுவுமே இல்லை என்பவர்கள் ஒரு டம்ளரில் தண்ணீரை மட்டுமாவது வைத்துக் கொள்ளுங்கள்.  இப்பொழுது தரையில் ஒரு விரிப்பை விரித்து அதில் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு விநாயகப் பெருமானின் இந்த மந்திரத்தை தங்களால் இயலும் அளவிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். குறைந்தபட்சம் 21 முறையில் இருந்து அதிகபட்சம் 108, 1008 வரை கூட கூறலாம்.
“ஓம் விக்ன விநாயகா போற்றி ஓம்”
இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு சிறிது நேரம் கழித்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை கூறி நாம் வழிபாடு செய்யும்பொழுது விநாயகப் பெருமானே நம்முடைய வீட்டிற்கு வந்து நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பதோடு நமக்கு செல்வ செழிப்பையும் வாரி வழங்குவார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here