கோலாலம்பூரில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீண்டும் ரகளை; உடைமைகளுக்கு சேதம்

கோலாலம்பூரில் உள்ள வெளியுறவு அமைச்சின் விஸ்மா டிரான்சிட்டில் Transit தங்க வைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனியர்கள் மீண்டும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.

ஹாலில் பொருட்களை உடைத்து சேதப்படுத்திய அவர்கள் அழகு செடிகள் நடப்பட்டிருந்த ஜாடிகளையும் உடைத்திருக்கின்றனர். வெளியிலும் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்திய அவர்கள் தீ வைத்து கொளுத்திய காட்சிகள் காணொலியாக பரவி வருகிறது.

அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகளால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. இவர்கள் ஏற்கெனவே ரகளையில் ஈடுபட்டு பொருட்களை நாசப்படுத்தினர்.

தங்களை தங்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பும்படி பாலஸ்தீனியர்கள் நெருக்குதல் தந்து வருகின்றனர். இச்சம்பவத்தை ஆயுதப் படையினர் உறுதிபடுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here