சிட்னி:
அமெரிக்காவின் சிட்னி நகரம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதன் இரண்டாவது விமான நிலையத்தை 2026 இறுதியில் திறக்கவுள்ளது. இதனால் அந்நாட்டின் போக்குவரத்து இன்னமும் மேம்பாடடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்துக்கு உள்நாட்டில் அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கில் A$5.3 பில்லியன் (S$4.5 பி.) செலவில் மேற்கு சிட்னியில் கட்டப்பட்டுவரும் அந்த விமான நிலையம், 2031க்குள் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் பயணிகளைக் கையாளும். விமானப் பயணச்சீட்டு விலைகளைக் குறைத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளியலுக்கு உந்துதலை அது தரும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம், நீண்டகாலமாகவே தள்ளிப்போடப்பட்டு வந்துள்ளது. 1940களில் முதன்முறையாக பரிசீலிக்கப்பட்ட இந்த விமான நிலையத்தைக் கட்டி முடிப்பதற்கான முயற்சி, அரசியல் தலைவர்களின் இயலாமையால் பலமுறை கைகூடவில்லை.
5.3 மில்லியன் பேருடன் நாட்டிலேயேஆக அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள சிட்னிக்கு பல்லாண்டு காலமாகவே இரண்டாவது விமான நிலையம் தேவைப்பட்டது. 1919ல் திறக்கப்பட்ட தற்போதுள்ள சிட்னி விமான நிலையம், உலகிலேயே ஆகப் பழமையான விமான நிலையங்களில் ஒன்று. ஆஸ்திரேலியாவின் ஆகப் பரபரப்பான விமான நிலையமும் அதுவே. ஆண்டுதோறும் அவ்வழியாக ஏறக்குறைய 45 மில்லியன் பயணிகள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்கின்றனர்.
ஆனால், நகரின் மையப் பகுதிக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளதால் அதன் விரிவாக்கப் பணிகளுக்குக் கட்டுப்பாடு உள்ளது.
சிட்னியில் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான தேவையை அப்போதைய ஆஸ்திரேலிய அரசாங்கம் 1940களில் உணர்ந்தது. ஆனால், இடத்தைத் தேர்வுசெய்வது, விமான நிலையத்தைக் கட்டுவது தொடர்பிலான குழப்பத்தால் இத்திட்டத்தில் இழுபறி நீடித்தது. இரண்டாவது விமான நிலையத்தைக் கட்டுவதற்கு உள்ளூர் சமூகக் குழுக்கள் எதிர்ப்பும் வர்த்தகக் குழுக்கள், விமான நிறுவனங்கள் அதற்கு ஆதரவும் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இரண்டாவது விமான நிலையம் கட்டி முடிக்கப்படுவதற்கு நீண்டகாலம் ஆகியிருக்கலாம். ஆனால், நாடெங்கும் வெளிநாடுகளிலும் உள்ள பயணிகள், கட்டுமான நிறைவை வரவேற்கவுள்ளனர்.சிட்னி: அமெரிக்காவின் சிட்னி நகரம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதன் இரண்டாவது விமான நிலையத்தை 2026 இறுதியில் திறக்கவுள்ளது. நாட்டின் போக்குவரத்து ஆற்றலை அது உருமாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.