கோலாலம்பூர்:
இசை கச்சேரி போன்ற பெரிய நிகழ்விகள் நடைபெறும் அரங்குகளில், அங்குள்ளவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளாரா என்பதை கண்டறியும் நோக்கில் சிறுநீர் பரிசோதனைகளை மேற்கொள்வது நடைமுறைக்கு மாறானது என்றும், அதனை செயல்படுத்துவது கடினம் என்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் (AADK) இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
இவ்வாறான இசை கச்சேரி நடைபெறும் அரங்குகளில் போதைப்பொருள் தடுப்பு பிரச்சார செய்திகளை ஊக்குவிப்பதோடு, அதன் இருப்பு மற்றும் அமலாக்க முயற்சிகளை அதிகரிப்பதிலும் தமது நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது என்று ரஸ்லின் கூறினார்.
“ஒருவேளை, டிக்கெட்டுகளில், நாங்கள் ஒரு போதைப்பொருள் தடுப்பு லோகோவைச் சேர்க்கலாம், மேலும் கச்சேரி தொடங்குவதற்கு முன்பு போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தையும் நடத்தலாம் என்று இன்று தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமையகத்தில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் அவர் சொன்னார்.





















