கோலாலம்பூர்:
உம்ரா யாத்திரை தொடர்பில் மோசடி செய்ததாக கூறப்படும் ஒரு பயண முகவர் நிறுவனத்தை நடாத்தும் கணவன்-மனைவி நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து பல கணினிகள், பாஸ்போர்ட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும் கைப்பற்றியதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் கூறினார்.
சம்மந்தப்பட்ட நிறுவனம் உம்ரா யாத்திரையில் மோசடி செய்ததாக சிப்பாங்கில் காவல்துறைக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் குறித்த 31 வயது தம்பதியினர் கோலாலம்பூரில் வைத்தது கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“புகார் கொடுத்த பெண் உட்பட, 379 பேர் உம்ரா செய்ய முடியாமல் மக்காவில் சிக்கித் தவித்ததாக விசாரணையில் கண்டறியப்பட்ட்தாக அவர் மேலும் கூறினார்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
























