ஜோகூரில் தப்பியோடிய கைதியை தேடி வரும் போலீசார்

போலீஸ் காவலில் இருந்து நேற்று மதியம் ஆடவர் ஒருவர் தப்பிச் சென்றதை அடுத்து, தங்காக், அண்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் போலீசார் சாலைத் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். தங்காக் காவல்துறைத் தலைவர் ரோஸ்லான் தாலிப், கூறுகையில்  சந்தேக நபர் கடைசியாக இருந்த விலாசம் எண். 122, கம்போங் பாடாங் லாடாங் என்றும் தப்பிச் சென்றவர் 38 வயதான சைஃபுல்னிசாம் ஜகாரியா என அடையாளம் காட்டினார்.

தோராயமாக 170 செ.மீ உயரம், மெலிதான மற்றும் கருமையான நிறம் கொண்ட சைஃபுல்னிசாம், 1952 ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். வழக்கு குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்காக் காவல் தலைமையகத்தை 06-9785222 என்ற எண்ணில் அல்லது விசாரணை அதிகாரி ஷரிதத்துல் அஃப்லாஹா இஸ்மாயிலை 019-2699573 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here