அலோர் ஸ்டார்:
சுங்கை பட்டாணியின் தாமான் ரியா ஜெயாவில் உள்ள ஒரு மறுசுழற்சி தொழிற்சாலையில் இன்று சனிக்கிழமை (ஜனவரி 25) அதிகாலை ஏற்பட்ட தீ சம்பவத்தில் 80 விழுக்காடு சேதமடைந்தது.
இருப்பினும், இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று, கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூத்த செயல்பாட்டுத் தளபதி, மூத்த தீயணைப்பு கண்காணிப்பாளர் II அப்துல் ஃபதாஃப் அம்டான் கூறினார்.
அதிகாலை 2.35 மணிக்கு தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்ததாகவும், சுமார் எட்டு நிமிடங்கள் கழித்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
“ஆரம்ப மதிப்பீடுகளின்படி, தொழிற்சாலையின் சுமார் 80 சதவீதம் அழிந்துள்ளதாக கூறப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.





















