கோலாலம்பூர்:
மலேசியாத் தயாரிப்பான வேர்க்கடலை கேக்கில் (Kacang Koya), ஒவ்வாமை இருப்பதாகக் கூறி, அதன் சந்தையிலிருந்து குறித்த தயாரிப்பை திரும்ப பெறுமாறு சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) அழைப்பு வெளியிட்டுள்ளது
.
SFA தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், குறித்த வேர்க்கடலை கேக்கில் (Kacang Koya) வில் பால் இருப்பதை SFA கண்டறிந்துள்ளது. ஆனால் அந்த உணவுப் பொதி லேபிளில் இதுகுறித்து அறிவிக்கப்படவில்லை.
“பால் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் பொருளாக இருப்பதால், சம்பந்தப்பட்ட தயாரிப்பை திரும்பப் பெறுமாறு அதன் சிங்கப்பூர் இறக்குமதியாளரான Goods Huat Hee Marketing நிறுவனத்தை SFA அறிவுறுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து குறித்த மலேசியத் தயாரிப்பை சந்தையிலிருந்து திரும்ப பெரும் பணி நடந்து வருகிறது” என்று அது கூறியது .
“சிங்கப்பூர் உணவு விதிமுறைகளின் கீழ், உணவு ஒவ்வாமையால் நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அவற்றிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, உணவுப் பொதி லேபிள்களில் அதிக உணர்திறன் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டால், அவை தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்” என்று SFA மேலும் கூறியுள்ளது.





















