சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் இலங்கை இவ்வளவு முன்னேறி விட்டதா என சிந்திக்க வைக்கும் அளவில் ஒரு காணொளி இணையத்தில் வைரலாகிவருகின்றது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பல நாடுகளில்கூட, மசா ஜ் சேவை அவற்றுக்கென அமைக்கப்பட்ட தனியான மையங்களில்தான் நடத்தப்படுகின்றன.
ஆனால் இலங்கையில், ஓடும் ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் செய்வது போன்று காணொளி வெளியாகி, அசத்தும் Comment களை அள்ளிவருகின்றது.
இந்த விவகாரம் குறித்து அங்குள்ள ரயில்வே திணைக்களமோ, இதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை எனவும், இந்த ரயில், சுற்றுலாவுக்காக தனியார் நிறுவனம் ஒன்றினால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், மசாஜ் சேவை வழங்குவது குறித்து எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் இதற்கான விசாரணையை தாம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.
எனினும், இதில் என்ன தவறு இருக்கிறது? சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கப்படுவார்கள் என சில விமர்சனங்களும், இதுதான் புதிய அரசாங்கத்தின் சுற்றுலா புரொமோஷனா என சில விமர்சனங்களும், இது பெரும் கலாச்சார சீரழிவை கொண்டுவரும் என பல விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களை பதம் பார்க்கின்றன.
விமர்சனங்கள் என்பது இலங்கைக்கு புதுசா என்ன?