கோலாலம்பூர்:
அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவலம் இன்றளவும் தொடர்கிறது. இதற்கு என்னதான் தீர்வு?
தனியார் மருத்துவமனைகளில் பணத்தைக் கொட்டி மன உளைச்சலை தவிர்ப்பதற்கு ரக்கான் கேகேஎம் (Rakan KKM) என்ற ஒரு தூரநோக்குத் திட்டத்தை மடானி கோட்பாட்டின்கீழ் அரசாங்கம் வகுத்திருக்கிறது. Rakan KKM என்பது மலேசிய சுகாதார அமைச்சின் சுருக்கம் ஆகும்.
அனைத்து மலேசியர்களுக்கும் தாக்குப்பிடிக்கும் செலவில் நிறைவான மருத்துவச சேவையை வழங்குவதுதான் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் நன்மை அளிக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

Rakan KKM வழங்குவது என்ன?
பி40 வருமான பிரிவினர் அவர்களின் சக்திக்கு ஏற்ற வகையில் தொடர்ந்து சிறப்பான மருத்துவத்தை பெறுவதை ரக்கான் கேகேஎம் உறுதி செய்கிறது. தரமான மருத்துவச் சேவைக்கு பணம் செலுத்துவதற்கு தயாராக உள்ள பி40 தரப்பினருக்கு மடானி பிரிமியம் பொருளாதாரச் சேவைகளை இத்திட்டம் வழங்குகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஸுல்கிஃப்ளி அமாட் கூறினார்.
இதற்காக தனியார் துறை முதலீட் டார்கள், ஜிஎல்சி எனப்படும் அரசு தொடர்பு நிறுவனங்களுடன் பங்காளித்துவந்து வலுப்படுத்துவதில் இத்திட்டம் கவனம் செலுத்தும் என்று கடந்த அக்டோபர் மாதம் அவர் அறிவித்திருந்தார்.
இதன்மூலம் மருத்துவச்சேவை கட்டமைப்பை விரிவுபடுத்தி மேம்படுத்த முடியும். குறைந்த வருமானத்தை பெறும் சமுதாயத்தினர் அவர்களின் சக்திக்கு ஏற்றவாறு மருத்துவச் சேவைகளை பெறுவதை உறுதி செய்வது இதன் இலக்காகும். ஒட்டுமொத்த ரீதியில் இத்திட்டம் நீடித்து நிலைப்பெறுவதற்கும் வகை செய்யப்படும்.
ஒவ்வொரு மலேசியரும் அவர்களின் பொருளாதார அந்தஸ்து பாராது தரமான மருத்துவச் சேவைகளை பெறுவதை உறுதி செய்வதுதான் ரக்கான் கேகேஎம் திட்டத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

Rakan KKM சேவைகள் தேர்வு செய்யப்பட்ட சில அரசாங்க மருத்துவமனைகளில் கிடைக்கப்பெறும்:
- நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.
- மருத்துவ நிபுணர்களை தேர்வு செய்யும் வாய்ப்பும் உள்ளது.
- வெளிநோயாளி, நாள் பராமரிப்பு, வார்ட்டுகளில் தங்குவது போன்றவற்றுக்கு தனிமையும் சௌகரியமும் உறுதி செய்யப்படுகிறது.
இச்சேவைகள் நிலையான பொது சுகாதார சேவைகளைக் காட்டிலும் கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் தனியார் மருத்துவமனை கட்டணங்களோடு ஒப்பிடும்போது ஒருவருக்கு சுமை தராத வகையில் இருக்கும்.

Rakan KKM சாதிக்கப்போவது என்ன?
பொது சுகாதார பராமரிப்புத் துறையில் நன்மைகள் தருவதோடு ரக்கான் கேகேஎம் திட்டத்தின் நோக்கங்கள் வருமாறு:
- சுகாதார பராமரிப்பு பணியாளர் தொடர்ந்து சேவையில் இருப்பதை மேம்படுத்துகிறது.
- பி40 பிரிவு பொதுசுகாதார பராமரிப்பில் முதலீட்டை அதிகரிக்கச் செய்வது.
- எம்40 வருமான பிரிவினருக்கு அதிகரித்து வரும் சுகாதார பராமரிப்பு செலவுகளுக்கு தீர்வு காண்பதற்கு மதிப்பீடு அடிப்படையிலான வாய்ப்புகளை வழங்குவது.

Rakan KKM மலேசியர்களுக்கு எவ்வாறு நன்மை அளிக்கிறது?
இத்திட்டத்தின் கீழ் சில வருமான பிரிவினர்கள் மீது கவனம் செலுத்தப்படும். எம்40, பி40 ஆகிய தரப்பினர்களின் பொது சுகாதார பராமரிப்புக்கு அதிகரிக்கப்பட்ட முதலீடுகள் செய்யப்படும். ரக்கான் கேகேஎம் திட்டத்தின் கீழ் பெறப்படும் வருமானம், சேவைகள், சம்பளம், திட்ட நிர்வாகம் ஆகியவற்றின் முழு செலவுகளையும் ஏற்கும் வகையில் இருக்கும்.
Rakan KKM சுகாதார பராமரிப்பு சேவையில் உள்ள நிபுணர்களை தொடர்ந்து அப்பணியின் நிலைத்திருக்கச் செய்வதற்கு கூடுதல் வருமானத்தை வழங்குவதை இத்திட்டத்தில் ஓர் அங்கமாக இருக்கிறது. நிபுணர்களும் பணியாளர்களும் இத்துறையில் நீடித்து நிலைத் திருப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதன் காரணமாக இவர்கள் தனியார் துறைக்கு செல்வதற்கு தயங்குவது இல்லை.

இதற்கு போதுமான சம்பளம், ஓய்வு பற்றாக்குறை ஒரு காரணமாக இருக்கிறது. அவர்களை அரசாங்கத் துறைகளிலேயே நிலைக்கச் செய்வதற்கு வேலை சூழ்நிலையை மேம்படுத்த வேண்டியிருக்கிறது.
சமுதாயத்திற்கு சேவையாற்றுவதற்கு இன்னும் அதிகமான எண்ணிக்கையில் நிபுணர்களும் அனுபவம் நிறைந்த நிபுணர்களும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்தை Rakan KKM கொண்டிருக்கிறது.
Rakan KKM திட்ட அமலாக்கத்திற்கு மடானி அரசாங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. 2025 பட்ஜெட் உரையில் பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை அறிவித்தார்.
























