ரோன் 97 வகை பெட்ரோல், டீசலின் விலை 5 சென் உயர்வு

கோலாலம்பூர்:

ரோன் 97 வகை பெட்ரோல், டீசலின் விலை 5 சென் உயர்வதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் கச்சாய் எண்ணெய் விலைகளின் அதிகரிப்பால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அது தெரிவித்தது.

ரோன் 97 வகை பெட்ரோல் லிட்டருக்கு 3 சென் 38 சென்னுக்கு விற்கப்பட்டு வந்தநிலையில், இன்று முதல் 5 சென் அதிகரித்து ரோன் 97 வகை பெட்ரோல் லிட்டருக்கு 3 சென் 43 சென்னாக விற்பனை செய்யப்படும்.

அதேபோல், டீசல் லிட்டருக்கு 3 ரிங்கிட் 8 சென்னாக விற்கப்பட்ட நிலையில் இன்று முதல் 5 சென் அதிகரித்து அது லிட்டருக்கு 3 ரிங்கிட் 13 சென்னாக விற்கப்படும்.

கடந்தாண்டு ஜூன் 10-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது தீபகற்பத்தில் டீசலின் சில்லறை விலை இன்னும் குறைவாகவே உள்ளது என்றும், இது லிட்டருக்கு 3 ரிங்கிட் 35 சென் ஆகும் என்று நிதியமைச்சகத்தின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரோன் 95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது தீபகற்ப மலேசியாவில் லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 சென்னிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here