பள்ளிகளில் பாலஸ்தீன ஒற்றுமை நிகழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்- பிரதமர்

செபாங்:
பள்ளிகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் பொம்மை துப்பாக்கிகளை ஏந்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இம்மாதிரியான நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

“இதை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவா தித்தோம். பள்ளிகளில் இது குறித்து ஒற்றுமையும் விழிப்புணர்வும் இருப்பதை பாராட் டுகிறோம், ஆனால் இம்மாதிரியா நிகழ்வுகளை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை” என்கிறார் அவர்.

இதை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டும், அதனால் இது ஒரு பிரச்சினையாக மாறாது, என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

சமூக ஊடகங்களில் வைரலான 55 வினாடிகள் கொண்ட வீடியோ, ஒரு பள்ளிக் கூடத்தில் குண்டு துளைக்காத உடுப்பு, பலாக்லாவா முகமூடி அணிந்து, ஆசிரியர் களின் குழு மாணவர்களை நோக்கி பொம்மை துப்பாக்கியை சுட்டிக்காட்டுவது போன்றவை படமாக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர்களில் ஒருவர் பலஸ்தீனக் கொடியை அசைத்தவாறு அல்லது முகத்திலும் தோள்களிலும் பாலஸ்தீன பதாகை அணிந்திருந்தவாறும், சிலர் பொம்மை துப்பாக்கி களையும் வைத்திருந்தனர். பாலஸ்தீனைக் காப்பாற்றுங்கள் என்ற வாசகத்துடன் பச்சை நிற பதாகைகள் அணிந்திருப்பதைக் அந்த காணொளி காட்டியது.

இது குறித்து பாலஸ்தீன ஒற்றுமை வாரத்திற்காக மாணவர்களை பொம்மை துப் பாக்கிகளை கொண்டு வர அனுமதித்த பள்ளிகளுக்கு எதிராக கடுமையான எச் சரிக்கையை வழங்குமாறு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குழந்தைகளிடம் நேர் மறையான எண்ணங்களை வளர்க்க வேண்டும் என்பதால் இந்த சம்பவம் கவலை யளிக்கும் என்றனர் சிலர். தயவுசெய்து இளைஞர்களை தனியாக விட்டு விடுங்கள் மற்றும் தலைவர்கள் இந்த பிரச்சினையை சமாளிக்கட்டும் என்றனர் சிலர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here