இந்தியாவிலும் மலேசியாவிலும் சட்டவிரோத கசகசா கடத்தல் நிறுத்தப்பட வேண்டும்

மலேசியாவிற்குள் ‘POPPY’ விதைகள் எனப்படும் கசகசா சட்டத்திற்குப் புறம்பாக இறக்குமதி செய்யப்படுகிறது. இது ஒரு கடுமையான விவகாரம். ஐநா தடை விதித்திருக்கும் ஆப்கானிஸ்தானில் இது பயிரிடப்பட்டு பாகிஸ்தான் வழியாக மலேசியாவிற்குக் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கசகசாவில் இருந்து பெறப்படும் வருமானம் ஆப்கானிஸ்தீனியர்கள் ஆயுதங்கள் வாங்குவதற்கும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது மறைமுகமாக அந்நாட்டு பயங்கரவாதக் கும்பலுக்கு உதவுவதாக உள்ளது. இது ஐநா நிறைவேற்றி இருக்கும் அனைத்துலகச் சட்டத்தை நேரடியாக அத்துமீறுவதாக உள்ளது.

இது குறித்து கசகசா மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர் ஒருவர் மலேசிய உள்துறை அமைச்சு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சு, அரச மலேசிய சுங்கத்துறை அரச மலேசியப் போலீஸ் படை, மலேசியக் குடிநுழைவுத்துறை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஆகியவற்றிடம் முறையிட்டிருக்கிறார். மலேசியாவில் கோலக்கிள்ளான்  பினாங்கு துறைமுகங்களில் கசகசா கடத்தல் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தப் பரிவர்த்தனைகளில் ரொக்கப்பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களைத் தேடிப்பிடிப்பது சிரமமாக உள்ளது. மலேசியாவைப் பொறுத்தவரை இங்குள்ள நிறுவனம் ஒன்று கசகசாவைப் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்கிறது. கப்பல்களில் வரும் கொண்டெய்னர்கள் மூலம் கசகசா மலேசியாவிற்குள் நுழைகிறது.
ஆனால் சுங்கத்துறை ஆவணங்களில் வேறொரு பெயரில் கசகசா மறைத்து கொண்டு வரப்படுகிறது.  அதேபோன்று மலேசியாவிலிருந்து இந்தியப் பிரஜைகள் ஒரு கிலோ, 2 கிலோ போன்ற அளவில் இந்தியாவிற்குள் கசகசாவைக் கொண்டு செல்கின்றனர். இது உண்மையிலேயே கடத்தலுக்கு ஈடானதாகும்.

சென்னை விமான நிலையம், திருச்சி விமாய நிலையம் ஆகியவற்றின் வழி இந்தப் பயணிகள் தாங்கள் எடுத்துச் செல்லும் உடைமைகளுடன் கலந்து சிறிய அளவில் எடுத்துச் சென்று அங்குள்ளவர்களிடம் ஒப்படைக்கின்றனர். இதற்கு அவர்களுக்குக் கட்டணமும் விதிக்கப்படுகிறது. விமானம் மேலும் கடல் மார்க்கமாகவும் கசகசா இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்படுகிறது. கடல்மார்க்கமாக தூத்துக்குடி துறைமுகத்தை அது சென்றடைகிறது. கசகசா ஒரு போதை மருந்தாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் இந்தியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பல நாடுகளில் கசகசாவுக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஐநா அனுமதித்திருக்கும் POPPY பயனீட்டிற்கு அனுமதி வழங்கி இருக்கும் 15 நாடுகளில் ஆப்கானிஸ்தான் இடம்பெறவில்லை. அனுமதி பெற்றிருக்கும் நாடுகளுள் துருக்கியும் ஒன்று. இங்கு POPPY பயிரீட்டிற்கு முறையான அனுமதி வழங்கப்பட்டு கசகசா ஏற்றுமதிக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.

POPPY விதையில் இருந்து மிகவும் சக்திவாய்ந்த அபின்எனும் போதைப்பொருள் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் மோர்பின், கோடின், ஹெரோய்ன் வகை போதைப்பொருள். ஒப்சிக் கோடோன் ஆகிய போதைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 1985 போதைப்பொருள், சைக்கோடுரோபிக், வஸ்துகள் சட்டம் POPPY உற்பத்தி, விற்பனை, கொள்முதல், அதனை மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்வது கிடங்கில் சேமித்து வைப்பது போன்றவற்றுக்குத் தடை விதிக்கிறது.

ஐநா பொருளாதாரம், சமூக மன்றத் தீர்மானமானது POPPY விதைகள் (கசகசா) கிறது. சட்டப்பூர்வமாகப் பயிரிடப்படும் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. அனுமதிச் சான்றிதழ் பெற்ற நாடுகளில் துருக்கி, செக்கோஸ்லோவேக்கியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியாவில் 2024, 2025ஆம் ஆண்டுகளில் கசகசா கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு தடை செய்யப்பட்ட பொருள் என்பது தெரிந்தும் அதனைத் துணிகரமாக இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் கடத்துவதில் ஒரு கும்பல் ஈடுபட்டிருக்கிறது. சந்தேகத்திற்குரிய வகையில் கசகசா கடத்தப்படுவது தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசாங்கங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இது அனைத்துலக போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின்சட்ட விதிமுறைகளிலும் அடங்கி இருக்கிறது. இது தவிர்த்து 1961 போதைப்பொருள், கடுமையான குற்றச்செயல் மீதான ஐநா சட்டம் சட்டவிரோத கசகசா விற்பனையைத் தடை செய்கிறது. குறிப்பாக ஆப்கான் அதன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் கசகசாஏற்றுமதியின் மூலம் பெறப்படும் பணத்தைப் பயன்படுத்துகிறது என்பதை ஐநாவின் இச்சட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.  எல்லா சாத்தியப்பூர்வமான வழிகளிலும் சட்டவிரோத POPPY பயிரீட்டைத் தடைசெய்ய வேண்டும் என்றும் ஐநாவின் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

இந்தியர்களின் உணவில் கசகசா ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. இதனை ஒரு காரணமாகப் பயன்படுத்தி மலேசியாவில் இருந்து இந்தியாவிற்குச் செல்லும் இந்தியப் பிரஜைகள் வழி கசகசாவை அந்நாட்டிற்குக் கடத்திச் செல்லும் யுக்தியை சட்டவிரோதக் கும்பல் பயன்படுத்துகிறது. இது போதைப்பொருள் கடத்தலுக்கு ஈடானதாகும். பிடிபட்டால் மிகக்கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை இவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 1,000, 2,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கசகசாவை அந்நாட்டிற்குக் கடத்துபவர்கள் மிகப்பெரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

-பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here