கோலாலம்பூர்:
சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தனியார் வாகனங்களுக்கு 50 விழுக்காடு டோல் கட்டண கழிவு கழிவை அரசாங்கம் வழங்குவகிறது.
இந்த 50 விழுக்காடு டோல் கட்டண கழிவு வழங்குவதால் அரசாங்கத்திற்கு 20.08 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படும் என்று பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
இந்த சலுகை ஜனவரி 27ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் ஜன்வரி 28ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என்றும், அதேநேரம் நாட்டின் எல்லைகளில் குறிப்பாக சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம், தஞ்சோங் குபாங் டோல் சாவடிகளில் இந்த நடைமுறை இருக்காது என்று அமைச்சர் சொன்னார்.
கடந்த செவ்வாய்கிழமை அரசாங்கம் இனியும் இலவசடோல் கட்டண சேவையை வழங்காது என்றும், அது இலக்கிடப்பட்ட தரப்புக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















