கூச்சிங்:
சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை தொடர்ந்து அதிகரித்துள்ளது, 2,185 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 7,760 பேர் அங்குள்ள 54 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மிரியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 129 பேர் அங்குள்ள இரண்டு துயர்துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் கனோவிட்டில் ஒரு நீண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 37 பேர் மற்றுமொரு துயர்துடைப்பு மையத்தில் தங்கியுள்ளனர் என்று, சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
தற்போது சரவாக் முழுவதும் 56 தற்காலிக நிவாரண மையங்கள் செயற்பாட்டிலுள்ளன என்றும், இதில் 2,225 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 7,926 பாதிக்கப்பட்டவர்கள் தங்கி உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.





















