குவா மூசாங்:
கார் மற்றும் டிரெய்லரை உட்படுத்திய விபத்தில் பெற்றோர் இருவரும் மரணமடைந்த நிலையில், பிள்ளைகள் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை ஜாலான் குவா மூசாங் – ஜாலான் கோலக் கிராய் செல்லும் சாலையில் நான்கு பேர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் சிக்கிக் கொண்ட 25 வயதுடைய ஷாமி பர்ஹான், 26 வயதுடைய நூருல் ஷாபிகா ஆகியோர் சம்பவ இடத்தில் மரணமடைந்தனர். அதேநேரம் அவர்களின் பிள்ளைகளான 5 வயது முகமட் இஸ் டேனியல் மற்றும் 10 மாதக் குழந்தை நூர் இர்டினா, ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர், இச்சம்பவத்தை குவா மூசாங் போலீஸ் தலைவர் சிக் சோன் பூ உறுதிப்படுத்தினார்.




















