பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் சுட்டுக்கொலை

டென்பசார்:

இந்தோனீசியாவின் பாலி தீவில் ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மற்றோர் ஆஸ்திரேலிய ஆடவரும் சுடப்பட்டு காயமடைந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை (ஜூன் 14) அதிகாலை நிகழ்ந்ததாகக் காவல்துறை, ஊடகங்களிடம் தெரிவித்தது.

துப்பாக்கிக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை பாலி காவல்துறை தேடி வருகிறது. துப்பாக்கிச்சூடு பாலியின் பாண்டுங் வட்டாரத்தில் உள்ள பங்ளா ஒன்றில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று காவல்துறைப் பேச்சாளர் அரியசாண்டி குறிப்பிட்டார். Detik.com செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான இருவரும் ஸிவன் ஆர், 32, என்றும் சனார் ஜி, 35, என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸிவன் ஆர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மோசமான காயங்களுக்கு ஆளான சனார் ஜி, மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து இருவர் மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடியதாக நேரில் கண்டவர்கள் விவரித்தனர் என்று அரியசாண்டி குறிப்பிட்டார்.

தப்பியோடியதாக நம்பப்படும் இருவரும் ஆஸ்திரேலிய பாணியில் ஆங்கிலம் பேசியது கேட்கப்பட்டதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here