3 மாத குழந்தையை பயன்படுத்தி காரில் பனியை துடைத்த வாலிபர்

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பயனர்களை அதிர்ச்சியடைய செய்யும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ஆஸ்திரேலியாவில் உள்ள போர்ட் ஆர்தர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் வீடுகள் முன்பும், சாலையோரங்களில் நிறுத்தியிருக்கும் கார்களை கூட பனி சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் அங்கு ஒரு வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் கண்ணாடி தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்திருந்த நிலையில், பனியை அகற்றுவதற்காக ஒரு வாலிபர் 3 மாத கைக்குழந்தையை பயன்படுத்திய காட்சிகள் உள்ளது. அந்த வாலிபர் தனது காரின் கண்ணாடியில் இருந்த பனியை துடைப்பதற்காக 3 மாத குழந்தையை கருவி போல பயன்படுத்தி பனியை அகற்றும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

டிக்-டாக் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரின் செயலை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here