மலேசியாவின் இருப்பிலிருந்து கனிம வளங்களை தென்கொரியாவுக்கு விநியோகம் செய்வது மற்றும் தற்காப்பு தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் தென்கொரியாவும் மலேசியாவும் நேற்று திங்கட்கிழமையன்று (நவம்பர் 25) கையெழுத்திட்டதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவுக்கு மூன்று நாட்கள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மற்றும் மலேசியப் பேராளர் குழுவும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலை சந்தித்து, பரஸ்பர அன்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில்,
மேலும், அடுத்த ஆண்டுக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கடப்பாடு கொண்டுள்ளதாக இருநாட்டுத் தலைவர்களும் கூறினர். இதில் சேவைகள், முதலீடு, தூய எரிசக்தி ஆகியவை அடங்கும் என்று பிரதமர் பேஸ்புஃக்கில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தென்கொரியாவிடமிருந்து புதிய போர் விமானங்களை வாங்க மலேசியா ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பது தொடர்பாக அறநிறுவனம் ஒன்றை அமைக்க மலேசியாவும் தென்கொரியாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
























