ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, ஜஸ்பரீத் பும்ராவுக்கு முதுகு பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதனால், பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா பங்கேற்பாரா இல்லையா என்பது சந்தேகமாக இருந்தது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ஜஸ்பரீத் பும்ராவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அப்போது பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், ‘‘பும்ரா இன்னமும் முழு பிட்னஸை எட்டவில்லை. 5 வாரங்கள் வரை, அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதன்பிறகுதான், அவரது முழு பிட்னஸ் குறித்து தெரிய வரும்’’ எனக் கூறினார்.
இந்நிலையில், பும்ராவின் பிட்னஸ் குறித்து தற்போது புது அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, பும்ரா குறித்து இறுதி முடிவை பிப்ரவரி 11ஆம் தேதி பிசிசிஐ எடுக்க உள்ளதாம். அன்று பும்ரா முழு பிட்னஸுடன் இருக்க வேண்டும். ஒருவேளை, சிறு குறைபாடுகள் இருந்தாலும் பும்ராவை, சாம்பியன்ஸ் டிராபியில் சேர்க்க முடியாது என பிசிசிஐ திட்டவட்டமான முடிவில் இருக்கிறதாம்.









