யாங் டி-பெர்த்துவான் அகோங் கல்வி உபகார சம்பளத்திற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 3 முதல் 28 வரை திறப்பு

2025ஆம் ஆண்டிற்கான யாங் டி-பெர்த்துவான் அகோங் கல்வி உபகார சம்பளத்திற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 3 முதல் 28 வரை திறக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5ஆம் தேதி பொது சேவை இலாகா (JPA) வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த உபகார சம்மபளம் முழு நேர முதுநிலை மேலும் முனைவர் பட்டப் படிப்பை உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொடர விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், பொருளாதாரம், போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

பொது சேவை இலாகா தகவலின்படி, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கல்வி மேலும் தொழில்துறை துறைகளில் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வி, இன்னும் பிற செயல்பாடுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், சிறப்பான தலைமைத்துவ திறன் கொண்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என JPA தெரிவித்துள்ளது.

மேலதிக விவரங்களுக்கு JPA அதிகாரப்பூர்வ வலை தளத்தை வலம் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here