பணக்கஷ்டம் தீர்க்கும் அபூர்வ மந்திரம்

இன்று தை மாத கடைசி வெள்ளிக்கிழமை. தை மாதம் வந்த மற்ற வெள்ளிக்கிழமைகளில் எல்லாம் மகாலட்சுமியை நினைத்து வீட்டில் பூஜை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, இன்றைய தினம் மாலை பூஜையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த ஒரு பாடலை மட்டும் மனம் உருகி படிக்க வேண்டும்.
நீங்கள் வேண்டிய வரங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும்.
மகாலட்சுமியின் அபூர்வ மந்திரங்களில் இதுவும் ஒன்று. வீட்டில் இருக்கும் பெண்கள் வழக்கம் போல பூஜை அறையை அலங்காரம் செய்து, வழக்கம் போல விளக்குகளை ஏற்றி வைத்து, வாசம் நிறைந்த தூபங்களை போட்டு, பின்பு இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும். உங்கள் வேண்டுதல் எல்லாம் மகாலட்சுமியின் செவிகளில் விழும். நீங்கள் இன்றைய தினம் கட்டாயம் உச்சரிக்க வேண்டிய மகாலட்சுமி மந்திரம் இதோ உங்களுக்காக.
மகாலட்சுமி மந்திரம் சுத்த லக்ஷ்ம்யை புத்தி லக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே ஸௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
வசோ லக்ஷ்ம்யை காவ்ய லக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸ்ருங்கார லக்ஷ்ம்யை  மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
தனலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
இந்த மந்திரம் பார்ப்பதற்கு கொஞ்சம் வடமொழி எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து, உச்சரிக்க கஷ்டமாக இருப்பது போல தோன்றும். ஆனால் லட்சுமிகளின் பெயர்கள் தான் இவை. படிக்கும்போது உங்களுக்கு சுலபமாக புரிந்துவிடும். இந்த மந்திரத்தை நம் வாயால் உச்சரிக்கும் போதே மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி வரும்.
அஷ்டலட்சுமிகளும் நம் வீட்டிற்குள், நம் மனதிற்குள் வந்து குடியேறியது போல ஒரு திருப்தியும் கிடைக்கும். இதே திருப்தியோடு வேண்டிய வரங்களை எல்லாம் தாயாரிடம் கேட்டு உங்களால் முடிந்த நெய்வேதியத்தை வைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here