பினாங்கின் ஜார்ஜ் டவுனில் நேற்று காலை 21 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் எதிர் பாதையில் சென்று கார் மீது மோதியதில்உயிரிழந்தார். ஜாலான் மஸ்ஜித் நெகிரி சுரங்கப்பாதையில் ஒரு வளைவைத் திருப்பும்போது பாதிக்கப்பட்டவர் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது என்று திமூர் லாவூட் காவல்துறைத் தலைவர் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இன்று அதிகாலை 1.10 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். காரின் ஓட்டுநர் காயமின்றி இருந்ததாகவும், அதில் பயணித்த 11 வயது பெண்ணின் கையில் லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.









