ரெயில்வே கேட்டில் சிக்கிய கார் டிரைவரின் சாமர்த்தியம்

அமெரிக்காவில் உள்ள உட்டா நகரில் ரெயில்வே கேட் வழியாக வாகனங்கள் சாதாரணமாக சென்று வந்தன. சம்பவத்தன்று ரெயில் பாதையில் வாகனங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது ரெயில் வந்த நிலையில், அவ்வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது என கேட் போடப்பட்டது.

இதை கவனிக்காமல் கார் டிரைவர் ஒருவர் ரெயில்வே கேட்டுக்குள் சென்றுவிட்டார். இதனால் அவரது கார் கேட்டுக்குள் சிக்கிய நிலையில், டிரைவர் அதில் இருந்து காரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். ஆனால் காரை பின்னால் கொண்டு வருவதற்கு இடையூறாக கேட் இருக்கிறது.

இந்நிலையில் ஹாரன் ஒலித்தபடியே ரெயில் வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த கார் டிரைவர் விரைவாக செயல்பட்டு காரில் இருந்து கீழே இறங்கி ஓடினார். பின்னர் அந்த தடத்தில் வேகமாக சென்ற ரெயில் கார் மீது மோதியது. இதில் கார் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. துரித நேரத்தில் இறங்கி ஓடியதால் டிரைவர் சாமர்த்தியமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவங்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் டிரைவரின் சாமர்த்தியத்தை பாராட்டி பதிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here