சென்னை:
சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்காக ‘பிங்க்’ ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சட்டசபை கூட்டத்தொடரின் போது, பெண்கள் பாதுகாப்பு, அவர்களுக்கான சுயவேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.2 கோடியில் பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறி இருந்தார்.
இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி ஆட்டோ முழுவதும் பிங்க் வண்ணத்தில் இருக்க வேண்டும். ஜி.பி.எஸ்., கருவி மற்றும் vltd device என்ற வாகன கண்காணிப்பு சாதனம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மகளிர் பாதுகாப்புக்கான இந்த பிங்க் ஆட்டோ திட்டம் குறித்து பொதுமக்கள் 15 நாட்களில் கருத்துகளை தெரிவிக்கலாம்.