வரி ஏய்ப்பு விசாரணையை கைவிட இத்தாலிக்கு ரூ. 2953 கோடி வழங்க கூகுள் சம்மதம்

கூகுள் உலகளவில் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக விளங்கி வருகிறது. யூடியூப் உள்ளிட்டவைகள் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது.

கூகுள் மூலம் சேவைகள் வழங்கினாலும் விளம்பரங்கள் மூலமாக அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகிறது. இந்த வருமானத்திற்கு கூகுள் முறையாக வரி கட்டுவதில்லை. வரி ஏய்ப்பு செய்வதாக பல்வேறு நாடுகள் குற்றம் சுமத்தியதுடன் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வகையில் பிரான்ஸ் வழக்கு தொடர்ந்திருந்தது. அப்போது ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக பணம் செலுத்தி வரி ஏய்ப்பு விசாரணையை முடித்துக்கொண்டது.

பிரான்சை தொடர்ந்து இத்தாலியும் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இத்தாலி அரசுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தியது.

இறுதியாக 2015 முதல் 2019 வரை விளம்பரம் உள்ளிட்டவைகள் மூலம் வருவாய் ஈட்டியதற்கான வரி ஏய்ப்பு விசாரணையை கைவிட கூகுள் நிறுவனம் 340 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 2953 கோடி) செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளோம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.ஆனால் கூகுள் நிறுவனம் இது தொடர்பாக உடனடியாக பதில் ஏதும் அளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here