கடும் குளிரிலும் லியோனல் மெஸ்ஸி செய்த மேஜிக்..

CONCACAF சாம்பியன்ஸ் கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் இன்டர் மியாமி மற்றும் ஸ்போர்டிங் கன்சாஸ் சிட்டி மோதின. இந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி 1 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த முக்கியமான கோலை லியோனல் மெஸ்ஸி தான் அடித்தார். என்னதான் லியோனல் மெஸ்ஸி கோல் அடிப்பது சர்வ சாதாரண விஷயமாக இருந்தாலும் இந்த போட்டியில் ஒரு கோல் அடித்தது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.

அதற்கு ஒரே காரணம் வானிலை தான். கடுமையான குளிர் நிலவிய நிலையில் தான் இந்த போட்டி நடைபெற்றது. பொதுவாக வீரர்கள் போட்டியின்போது வியர்வை சிந்தி விளையாடுவார்கள். ஆனால் இந்த போட்டியில் குளிர் தாங்கமுடியாமல் வீரர்கள் ஜெர்கின், கையுறை ஆகியவற்றை அணிந்துகொண்டு தான் விளையாடினார்கள்.

இதுபோன்ற கஷ்டமான சூழலில் வீரர்கள் விளையாடினாலும் அதிலும் லியோனல் மெஸ்ஸி தனியாக தெரிந்தார். அவரின் சிறப்புமிக்க ஆட்டத்திறன் மேலும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டது. ஆர்டிக் புயல் காரணமாக அமெரிக்காவில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இந்த கடுமையான சூழலிலும் நேற்றைய போட்டி நடைபெற்றது.

அந்த போட்டியில் இன்டர் மியாமி கட்டாய வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இருந்தது. அப்போது தான் கடைசி 16 லிஸ்டலில் இன்டர் மியாமி அணியால் இடம்பெற முடியும் என்ற சூழல் இருந்தது. இந்த சமயத்தில் தான் லியோனல் மெஸ்ஸி தான் யார் என மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். குளிரில் வீரர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளான நிலையிலும் லியோனல் மெஸ்ஸி தனி ஒரு ஆளாக தன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here