ஈப்போ: வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) தைப்பிங்கிற்கு அருகிலுள்ள ட்ரோங்கில் உள்ள ஒரு வீட்டின் குளியலறையில் 78 வயது முதியவர் ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டார். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை காலை 8.14 மணிக்கு ஒரு துயர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.
பத்து 14, கம்போங் டத்தோ ரோஸ்லியில் உள்ள வீட்டிற்கு தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, அவர்கள் குளியலறையின் கதவை உடைத்துத் திறக்க வேண்டியிருந்தாகவும் மருத்துவ ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். குளியலறையின் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.அதனால் நாங்கள் கதவை உடைக்க வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.









