நாட்டின் நற்பெயரைக் காப்பாற்றுங்கள் : புலம்பெயர்ந்தோருக்கு பிரதமர் அறிவுறுத்தல்

கோலாலம்பூர்,

நாட்டின் நற்பெயரை உலக நாடுகள் மத்தியில் காப்பாற்றும் தலையாய கடமை புலம்பெயர்ந்த மக்களுக்கு உள்ளது. அதன் தோற்றத்தை கட்டிக்காப்பதில் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். இதில் தூதரங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு உலக நாடு களில் வாழக் கூடிய மலேசியர்களின் தோற்றம், நடத்தை ஆகியவையே முக்கிய அம்சமாக உள்ளன.

அதோடு, வெளிநாட்டில் இருக்கக் கூடிய மலேசியர்கள், தங்கள் நாட்டின் சுற்றுலாத் தளங்கள். குறித்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். பினாங்கு, கோத்தா கினாபாலு போன்ற சுற்றுலாத் தளங்களின் தனித்துவத்தை வெளிநாட்டினரிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும் என நேற்று முன்தினம் இரவு பஹ்ரெய்னில் புலம் பெயர்ந்த மலேசியர்களுடனான இரவு விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது அன்வார் இதனை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் சுமார் 300 மலேசியர்கள் கலந்து கொண்டனர். பஹ்ரெய்ன் நாட்டு பட்டத்து இளவரசரும். பிரதமருமான சல்மான் பின் ஹமாட் அல்கலிபாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு தனது முதலாவது அதிகாரப்பூர்வ வருகையை பிரதமர் மேற்கொண்டார். வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர் கள் நாட்டின் நலன் குறித்து எப்போதும் சிந்திக்க வேண்டும். துடிப்புமிக்க கலாச்சாரம், பல இனங்கள், சமயங்களைக் கொண்ட மலேசியா பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அன்வார் தமது உரையில் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here