கூலி படத்தின் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

சென்னை,நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மீதமிருக்கும் படப்பிடிப்பை விரைவில் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளது. இந்த படமானது ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், இப்படத்தில் இடம் பெற்றுள்ள குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது கூலி படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட் நாளை காலை 11 மணியளவில் வெளியாக உள்ளது. இது நடிகை பூஜா ஹெக்டோவின் கதாபாத்திர அறிமுக போஸ்டராக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here