இன்று 2025 மார்ச் 2 ஆம் தேதி மலேசிய இந்து சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் இந்து சங்கத்தின் உயரிய விருதான ‘சங்கரத்னா’ விருது மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ அ. வைத்திலிங்கம் விருது பட்டயத்தை சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க. கணேசன், துணைத் தலைவர் கணேஷ் பாபு ராவ் முன்னிலையில் வழங்கினார்.








