இன்றைய காலத்தில் நாம் பல்வேறு வடிவங்களில் உள்ளாடைகளை பார்த்திருக்கலாம். ஆனால், மன்னர்கள் காலத்தின் உள்ளாடை டிசைன்களை நம்மில் எத்தனை பேர் பார்த்திருக்கிறோம்?
சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மன்னர்கள் காலத்தில் ராணிகள் அணிந்த இரும்பு உள்ளாடைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல, இந்த அரிய பொருளை ஒரு நபர் கடந்த பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளார் என்பதும் அனைவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
இந்த வீடியோவில் காணக்கூடிய முக்கிய அம்சம், இந்த உள்ளாடைகள் பூட்டுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதை பார்த்த பலரும், “ஏன் ராணிகள் இந்த மாதிரியான உள்ளாடைகள் அணிய வேண்டும்?” எனக் கேள்வியெழுப்பினர்.
அதற்குக் காரணம்? மன்னர்கள் தங்கள் ராணிகளை நம்பவில்லை! எனவே, அவர்களுக்கு இந்த “பூட்டிய உள்ளாடைகளை” அணிய வைத்திருக்கலாம் என கருத்துக்களை பகிர்ந்தனர் சமூக வலைதள பயனர்கள்.
அத்துடன், இந்த இரும்பு உள்ளாடைகள் குறைந்தது 500 ஆண்டுகளுக்கு முந்தையவை என சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இந்த நபர் குறிப்பிட்டிருக்கிறார். இது மன்னர்களின் நம்பிக்கையின்மையை காட்டுகிறதா, இல்லை பெண்களுக்கான பாதுகாப்பைப் எடுத்து சொல்கிறதா என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கிறது. மேலும், இரும்பு உள்ளாடைகளை தொடர்ந்து அணிந்திருப்பது சாதியமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஒருவேளை அணிவதற்கு வேறு மென்மையான உலோகங்கள் பயன்படுத்தியிருந்தாலும், அவற்றை வரலாற்றில் காட்டுவதற்காக இரும்பில் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருத்துக்கள் உள்ளன.








