இந்தியா பனிச் சரிவில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

இந்தியாவின் பனி பிரதேசமான உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில், நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த வேளையில் மேலும் ஐவரைக் கண்டுபிடிக்க மீட்பு மற்றும் தேடுதல் (SAR) நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லைச் சாலை நிர்மாணிப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாம் புதைந்தது. அங்கு கூடாரங்களில் இருந்த 55-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கினர்.

இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் நான்கு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மரணம் அடைந்தனர். மேலும் மீட்பு மற்றும் தேடுதல் (SAR) குழுவினர் இன்னும் ஐந்து பேரை மீட்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here