டிராகன் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டிராகன் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.. ரூ. 37 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது..

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா, கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்த நிலையில், டிராகன் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 94 கோடிக்கும் மேல் வசூல் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here