ஒரு மாதத்திற்கு முன் ஃபேஸ்புக்கில் இஸ்லாத்தை சிறுமைப்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதற்காக நடிகர் ஹரித் இஸ்கண்டார், சிசிலியா யாப் (Cecelia Yap) இருவருக்கும் எம் சி எம் சி எனப்படும் மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் தலா 10,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
நாட்டில் சர்ச்சையான ஹாம் ‘ham’ சன்விட்ச் விவகாரம் குறித்து பேசிய சிசிலியாவும், ‘hamsap’ என்ற பெயரிலான ஒரு கிளாஸ் காப்பியின் புகைப்படத்தை பதிவேற்றிய ஹரித்தும், முன்னதாக சர்ச்சையில் சிக்கினர்.
அவர்களின் சர்ச்சைக்குரிய பதிவை, Meta ஏற்கெனவே நீக்கிவிட்டது.
இந்நிலையில் ஹரித், மேலும் சிசிலியாவின் ஃபேஸ்புக் கணக்குகளை நிரந்தரமாக முடக்குமாறு மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் முன்வைத்துள்ள விண்ணப்பத்தை, Meta பரிசீலித்து வருவதாக, நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவ்வாணையம் கூறியது.









