வாழ்க்கையில் நிம்மதி கெடுவதற்கு முதல் காரணமாக இருப்பது இந்த எதிரி தொல்லை தான். படிக்கும் மாணவர்களுக்கும் எதிரி இருக்கிறார்கள், வேலை செய்யும் இடத்திலும் எதிரி இருக்கிறார்கள், வியாபாரத்திலும் எதிரி இருக்கிறார்கள், அக்கம்பக்கம் வீட்டில் இருப்பவர்களும் எதிரிகளாக மாறுகிறார்கள், ஏன் நம்முடைய மூளைக்கு, மனசாட்சியே எதிரியாக செயல்படும். சில சமயம் நம்முடைய மூளை நமக்கு எதிரியாகும். சில சமயம் நமக்கு நாமே எதிரியாக மாறி விடுவோம். எதிரி என்ற வார்த்தைக்கு பின்னால் எத்தனை பிரச்சனை.
ஏதோ ஒரு பகை, தவறான புரிதல், தேவையில்லாத குழப்பம், சொத்து பிரச்சனை சொத்து, பகை, பணத்தால் வந்த பகை, சில பேருக்கு கௌரவத்தால் கூட பகை
வரும் இப்படி எந்த பிரச்சனைகள் உங்களைத் தொடர்ந்தாலும் அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால், எதிரி தொல்லையில் இருந்து விடுபட நாம் செய்ய வேண்டியது நரசிம்மர் வழிபாடு. மாதம் தோறும் வரும் அவிட்ட நட்சத்திரத்தில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு எதிரிகள் தொல்லை விலக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, நரசிம்மரை 5 முறை வலம் வர வேண்டும்.
குறிப்பிட்டு உங்களுக்கு எந்த எதிரியால் தொல்லை, அந்த நபரின் பெயரைச் சொல்லியே விளக்கு போட்டு வழிபாடு செய்யலாம். அந்த நபருக்கு எந்த பாதிப்பும் வராது அந்த நபர் தானாக உங்களை விட்டு ஒதுங்கி செல்வார்கள் அவ்வளவுதான். இதே போல 6 மாதம் வரக்கூடிய அவிட்டம் நட்சத்திரத்தில் தொடர்ந்து நரசிம்மரை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரி தொல்லை இருக்காது. காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக கூட சில பேருக்கு எதிரிகளால் பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்ட பெரிய தொந்தரவிலிருந்து விடுபட இந்த நரசிம்மர் வழிபாடானது வழி வகுக்கும். 

குடும்ப சண்டை, பங்காளிகள் சண்டை, வியாபார சண்டை, சொந்த பந்தங்கள் சண்டை என்று எது இருந்தாலும் சரி, கோர்ட் கேஸ் வழக்குகள் இருந்தாலும் சரி, இந்த வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய பிரச்சனைகளுக்கு அந்த நரசிம்மர் ஏதாவது ஒரு வகையில் தீர்வினை காட்டிக் கொடுப்பார். அதேபோல இந்த அவிட்டம் நட்சத்திரத்தன்று நீங்கள் ஆயுதத்தை தானமாக கொடுப்பது சிறப்பான பலனைத் தரும்.
எப்படி தெரியுமா. அய்யனார் கோவிலுக்கு அருவாள் சாத்துவாங்க. அம்மன் கோவிலுக்கு திரிசூலம் வாங்கி கொடுப்பாங்க. முருகர் கோவிலுக்கு வேல் வாங்கி கொடுப்பது, இதுபோல ஆயுதங்களை கோவிலுக்கு வாங்கி தானம் கொடுத்தாலும் உங்களுடைய எதிரி தொல்லை உடனடியாக தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தின் அருள் பெற தீபம் கைகலப்பு வந்துவிட்டது, ஒருவருக்கு ஒருவர் அடித்து சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள், சொத்து சண்டை எல்லாம் ஒரு முடிவுக்கு உடனடியாக வரவேண்டும் என்றால் அவிட்டம் நட்சத்திரத்தன்று ஆயுத தானம் செய்வது ரொம்ப ரொம்ப நல்ல பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.





















