ஒரே நாளில் 2 முறை விபத்தில் சிக்கிய இந்திய விமான படை விமானங்கள்

பாக்தோக்ரா,மேற்கு வங்காளத்தின் பாக்தோக்ரா விமான நிலையத்தில் இந்திய விமான படையை (ஐ.ஏ.எப்.) சேர்ந்த ஏ.என்.-32 ரக போக்குவரத்து விமானம் ஒன்று இன்று விபத்தில் சிக்கி உள்ளது.

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட இந்த வகை விமானத்தில் இருந்த விமானி, விபத்தில் இருந்து உயிர் தப்பினார். அவர் பாதுகாப்பாக உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தின் மீட்பு பணிகள் அந்த இடத்தில், நடந்து வருகின்றன. ஒரே நாளில், இந்திய விமான படையை சேர்ந்த விமானங்கள் விபத்தில் சிக்குவது இது 2-வது முறையாகும்.

இதற்கு முன், அரியானாவின் அம்பாலா பகுதியில் ஜாகுவார் ரக விமானம் ஒன்று தொழில் நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியது. பயிற்சியின்போது நடந்த இந்த சம்பவத்தில், அதன் விமானி மக்கள் யாரும் வசிக்காத பாதுகாப்பான பகுதிக்கு சென்று, பின்னர் விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here