முதல்-அமைச்சர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

டெல்லி, தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றது. இதையடுத்து, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது.

தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் தவெக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here